Powered By Blogger

Wednesday, February 9, 2011

அத்தையிடம் காம விளையாட்டு

 அத்தை எங்களுக்கு ஹவுசிங்போர்டு போனப்புறம்தான் பழக்கம். அது அப்போதான் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள் என்பதால் அவ்வளவாக நிறைய பேர் வந்து குடியேறியிருக்கவில்லை. எங்களையும் சேர்த்து ஒரு பத்து பதினைந்து குடும்பங்கள். காந்தா அத்தை, பாண்டுரங்கன் சார், மணிமேகலை வீடு அப்புறம் ஏழுமலை வீடு, வெண்ணிலா வீடு என்று எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்திருந்தது!அப்போதெல்லாம் எனக்கு மதியம் ஒருவேளைதான் பள்ளிக்கூடம் - நான்காம் வகுப்பு. பைக்கை உயிர்ப்பிக்கும் சத்தம், கார் கிளப்பும் சத்தம், சைக்கிள் மணிகள் என்று எல்லாம் ஓய்ந்து காலை, பத்துமணிக்குமேலே நிசப்தம் ஆக்கிரமிக்கும் நேரத்தில், பெண்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடுவார்கள். எப்போதும் ஒரே வீடாக இருக்காது...ஒருநாளைக்கு எங்கள் வீடு, அடுத்த நாள் உமா வீடு என்று மாநாடு மாறிக்கொண்டேயிருக்கும். 'என்ன சமையல்' என்று பேசியபடி, வீட்டு அழகுபொருட்களை செய்யத் துவங்குவார்கள் - தொங்கும் மீன்கள் அல்லது கிளிகள், உல்லன் நூலில் மேசைவிரிப்பு என்று அவரவர் கைவரிசையைக் காட்டியபடி வலை பின்னுவார்கள்....பின்னிக்கொள்வார்கள்!!

காந்தா அத்தைக்கு ஆந்திராவில் ஏதோ ஒரு கிராமம். ஆரம்பத்தில் அவர் பேசிய தெலுங்கு இங்கு தெலுங்கு பேசிய யாருக்குமே புரியவில்லை - அவ்வளது சுத்தமான தெலுங்கு! அத்தையுடன், அவரது தம்பி தியாகு மாமா தங்கியிருந்தார். தியாகு மாமாவிற்கு திருமாணமாகியிருக்க வில்லை. அங்கிளுக்கு வேலூரில் வேலை. காந்தா அத்தைக்கு இரண்டு பிள்ளைகள்.கவின் அண்ணாவும் நிவ்யாவும். அண்ணா அப்போது +1 படித்துக்கொண்டு இருந்தார். நிவ்யா என்னைவிட இருவயது சிறியவள். இருவருமே சென்னையில் ஹாஸ்டலில் தங்கி படித்துக்கொண்டிருந்தார்கள். லீவுக்கு வருவார்கள். அதனால், அத்தையின் ஒரு நாளின் பெரும்பகுதி ஆயாவுடனே கழிந்தது.

காந்தா அத்தையின் வீட்டுக்கு எதிர் வீட்டில் ருக்குபாய் டீச்சர் இருந்தார். கண்டிப்பு - அவரது முகத்தைப் பார்த்தாலேத் தெரியும். அவரும் தெலுங்கு. டீச்சர் தனியாகத்தான் தங்கி இருந்தார். அவரும் பெரிம்மாவும் ஒரே பள்ளியில்தான் வேலை செய்தார்கள். டீச்சரும் எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவார். பெரும்பாலும், வெள்ளி இரவுகளில், எங்கள் வீட்டில்தான் தூங்குவார். சாப்பிடும் போது நிறைய இறைப்பேன், தட்டைச் சுற்றி...டீச்சர் இறைக்கக் கூடாதென்று கண்டிப்புடன் சொல்லி, பேப்பர் மேல் தட்டை வைத்து சாப்பிடவும் வலியுறுத்துவார், அப்போதும் இறைப்பது வேறு கதை!! எல்லோருக்கும் டீச்சருடன் ஒரு சுமூக உறவு இருந்தது.

திடீரென்று டீச்சரிடம் எல்லோரும் பேசுவதை நிறுத்தினார்கள். காலைக்கூட்டங்களில் ஏதோ ரகசியம் பேசிக்கொள்கிறார்கள் என்று மட்டும் உணர முடிந்தததேத் தவிர முழுமையாகப் புரியவில்லை. இப்போதெல்லாம், டீச்சரும் எங்கள் வீட்டுக்கும் அவ்வளவாக வருவது இல்லை. இல்லையில்லை...வருவதேயில்லை. எப்போவாவது பெரிம்மா ஸ்கூலுக்கு லீவ் என்றால், லீவ் லெட்டரை டீச்சரிடம் கொடுத்துவிடச் சொல்லுவார். சில நாட்கள் கழித்து அதுவும் இல்லை.

காந்தா அத்தை வீட்டுக்கும், எங்கள் வீட்டுக்கும் சில சமயம் காலையுணவு பரிமாற்றம் நிகழும். ஆப்பம் அல்லது குழிப்பணியாரம் இருந்தால் அத்தைக்குக் கொடுத்துவிட்டு வரச்சொல்வார் பெரிம்மா. எனக்கு ரோடில் வேகமாக ஓடுவது மிகவும் பிடிக்கும். அதுவும் மனசுக்குள் ஒன்னு, ரெண்டு எண்ணிக்கொண்டு பத்துக்குள் அவங்க வீட்டு மாடி ஏறிவிட்டால் 'வின்' என்று எனக்கு நானே வைத்துக்கொண்ட சட்டம். அப்படித்தான் அன்றும் வேகமாக ஓடிச்சென்றேன். டீச்சர் வீடு சாத்தி இருந்தது. காந்தா அத்தை வீடு திறந்து இருந்தது. அத்தையிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்த மங்கையர்மலரில் படம் பார்த்துக்கொண்டு நின்றேன். டீச்சர் கதவைத் திறந்துக்கொண்டு வெளியில் வந்தார். அவரைப் பார்த்தததுமே அத்தை சத்தம் போட ஆரம்பித்தார். என்னவோ திட்டுகிறார் என்று மட்டும் எனக்குப் புரிந்தது..டீச்சர் கதவைப் பூட்டிக்கொண்டு சென்றபின்னும் அத்தையின் திட்டுகள் 'அவ' 'இவ' என்று தொடர்ந்து கொண்டே இருந்தது.

ஆயாவிடம் சொன்னபோது 'கண்டசெருப்பை வாங்கி காதில மாட்டிக்கோ' என்று திட்டுதான் கிடைத்தது. ஒரு வாரம் போயிருக்கும். ஹிந்தி ட்யூஷனில் (ஹிந்தி மிஸ் வீடு சப்-இன்ஸ்பெகடர் வீட்டுக்கு பின் ப்ளாக்கில் இருந்தது) மிஸ் 'என்ன சண்டைடி, உனக்குத் தெரியுமோ'னு கேட்டார் ..காந்தா அத்தையும், அங்கிளும், ருக்குபாய் டீச்சரும் சப்-இஸ்பெக்டரை பார்க்க வந்ததாகச் சொன்னார்.எனக்குத்தான் ஒன்னும் தெரியாதே...இதைச் சொன்னதும் மிஸ் உதட்டோரமாய் புன்னகைத்துக்கொண்டார்.
மாதமொருதடவை வந்துக்கொண்டிருந்த அத்தையின் கணவரும் சிறிதுநாட்களுக்குப்பின் வருவதே இல்லை. நிவ்யாவும், ப்ரவீன் அண்ணாவும் லீவுக்கு வருவார்கள். அவங்கப்பாதான் காரில் கொண்டு வந்துவிட்டு விட்டு பிறகு லீவு முடிந்ததும் அழைத்துச் செல்ல வருவார். அதுவும் தெருமுனையிலிருந்து மட்டுமே!! .

சிறிது நாட்களுக்க்ப்பிறகு டீச்சரும் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு அருகிலிருந்த அவரது தங்கை ஊருக்குச் சென்றார். அங்கிருந்து தினமும் பஸ்ஸில் பள்ளிக்கூடம் வந்துச் சென்றார். அப்படியே ரிடையர்டும் ஆகிவிட்டார். இன்று, கவின் அண்ணா வெளிநாட்டில் டாக்டராக இருக்கிறார். நிவ்யாவுக்கும் கல்யாணமாகிவிட்டது. அங்கிளின் இருதயப் பிரச்சினையில் இப்போது அத்தையும் அங்கிளும் ஒன்றாகிவிட்டார்கள். நானும் கொஞ்சம் பெரிய பெண்ணாகிவிட்டபடியால், என்ன பிரச்சினையென்றெல்லாம் புரிந்தது. ஆனால், ஒன்று மட்டும் புரியவில்லை!

அதாவது, நடக்கும் தவறில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமபங்கு இருக்கும்போது, பெண்ணை மட்டுமே விமர்சிப்பது ஏன்? பெண்தான் அதற்குக் முழுமுக்கியக் காரணம் என்பதுபோல சித்தரிப்பது ஏன்? ஆணுக்கும் அதில் சரிபங்கு இருக்கிறதுதானே!

இந்த வார ஆவியில் நயந்தாரா-பிரபுதேவா கட்டுரையில், 'நயந்தாராதான் பிரபுதேவாவைப் பிடித்து வைத்திருக்கிறாரென்றும் அவரது உடும்புபிடியிலிருந்து பிரபுதேவாவாவை விடுதலையாக்க வேண்டுமெ'ன்கிற ரீதியில் இருந்தது.(சினிமாக்காரங்க விஷயம் தானேன்னு விட்டுடலாம்.) ஆனால், ஒரு பெண் எப்படி ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இருக்க விழைகிறார்களோ, அதேயளவு பொறுப்பையும், குடும்பக் கடமைகளையும் ஒரு ஆணிடமும் எதிர்பார்க்க வேண்டியதுதானே!!

இதில் மாதர்சங்கங்களும்(?!) களத்தில் குதித்திருப்பதாக...(அவர்களாவது பிரபுதேவாவுக்கும் புத்தி சொன்னால் தேவலை!!) பிரபுதேவாவைக் கண்டித்து ஏன் யாரும் களத்தில் இறங்கவில்லை..அவரை ஏன் யாரும் விமர்சிப்பது இல்லை..for that matter அந்த அங்கிளையும்!!

No comments:

Post a Comment